Sivamuthumariamman

Sripuram Arulmighu Shiva Muthumariamman Temple, Coventry

ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய தோற்றமும் வளர்ச்சியும்

எமது தாயக மக்கள் தம் மொழி, கலை, பண்பாடு, ஆன்மீகம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி நோக்கிய பணிகளில் ஈர்ப்புடன் ஈடுபடும் நோக்கோடும், புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது இளைய மற்றும் நாளைய சந்ததியினரின் நலன்கள், நன்மைகள் கருதியும், அருள்மிகு சிவ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் கொவென்றி நகரில் முதல் கோவிலாக, ஸ்ரீ முத்துமாரியம்மனின் அருள்வாக்குக்கு இணங்க நிறுவனர் திரு இராகுலன் அவர்களால் சைவ சமய நற்பணி மன்றமாக 2009 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து பின்வரும் நிகழ்வுகள் அன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

18/12/2009 : வெள்ளிக்கிழமை தோறும் ராட்போர்டு ஸ்போர்ட்ஸ் சென்டரில் அருள்மிகு முத்துமாரியம்மன், வரசக்தி விநாயகர், சிவன் பார்வதி, முருகன் மற்றும் தர்ம சாஸ்தாவின் திருவுருவப் படத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் இம்மண்டபத்தில் வெள்ளி தோறும் வழிபாடு நடைபெற்று வந்தது.

04/04/2012 : அம்பிகையின் அருளோடு ஆலயத்துக்கான கட்டிடம் Foleshillல் குத்தகைக்கு எடுக்கபட்டது. அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் என்ற பெயரில் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் திருவுருவச்சிலை ஸ்தாபிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம், அலங்கார திருவிழாக்கள், பங்குனி உத்திரம், ஆடி பூரம் மற்றும் பல விழாக்கள், விரதங்கள் நடைபெற்றன.

30/08/2018:  ஐந்து வருட கால குத்தகை முடிந்து புதிப்பிக்கும் பொழுது, பல நிபந்தனைகள் மற்றும் நில வாடகை கூட்ட பட்டத்தின் காரணத்தினால் கோவில் நிறுவனர் சொந்தமாக கோவில் இடத்தினை கொல்வனை செய்வதற்கு முயற்ச்சித்து பல சோதனைகள், தடைகளை மீறி அம்பாளின் பரிபூரண ஆசீர்வாதத்தினாலும் நிறுவனர் திரு இராகுலனின் கனவில் அம்பாள் தோன்றி இடத்தினை காட்டி கொடுக்க, அதே இடத்தை நிறுவனர் நிரந்தர ஆலயம் அமைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு 01/10/2020ஆம் ஆண்டு பொறுப்பேர்க்கப்பட்டது. அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புதிய கோவிலில் பாலஸ்தாபனம் நடைபெற்று, மாத பூஜைகள், வருட விசேஷங்கள் மாசி மகம், அபிராமி பட்டர் விழா, பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, வைகாசி விசாகம், ஆணி உத்திரம், ஆடி பூரம், வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி, கௌரி காப்பு, கந்தசஷ்டி விரதம்,ஐயப்ப மண்டல பூஜைகள் மற்றும் விரதங்கள் நடைபெற்றன.

28/09/2019 ஆம் ஆண்டு தசம வரிஷாக்த்ஸ்வம் (10th Anniversary) இளந்தமிழ்க் கலைஞர்களின் சமர்ப்பணமாக அம்பாளுக்கு நடைபெற்றது

24/06/2020 ஆம் ஆண்டு ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கான மூலஸ்தான கட்டுமானப்பணி விநாயகர் பூஜை, பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

04/07/2020 ஆம் ஆண்டு சங்குஸ்தாபனம், அடிக்கல் நாட்டு நிகழ்வுகள் மிக விமரிசயாக நடைபெற்றன.

Scroll to Top