கொவென்றி சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தானம் வழிபாடு முறைகள்
- கோவிலுக்குள் வரும்பொழுது கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே வரவும்.
- அங்க பிரதட்சணம் செய்பவர்கள் திருவிழா அன்று தான் உருள வேண்டும் என்பது இல்லை. ஆலயத்தில் அறிவித்து காலை 8.00 மணி .முதல் 9.00 மணி வரை செய்யலாம்.
- கோவிலுக்குள் தேங்காய்சிரட்டை, வாழைப்பழத்தோல் மற்றும் குப்பைகூளங்கள்
போடக்கூடாது. - அம்மனை தரிசிக்க வருபவர்கள் தங்களால் முடிந்த அளவு பூ, எலுமிச்சம் பழம், மாலை, நெய், எண்ணெய் கொண்டு வரலாம்.
- உப்பு, மிளகு போடுபவர்கள் அதற்கு உண்டான தொட்டியில் தான் போடவேண்டும்.
- விபூதியை பூசி விட்டு மீதியை கோவில் வலாகத்தில் போட வேண்டாம்.
- ஆண்கள், பெண்கள் அவரவருக்கு உண்டான வரிசையில் தான் செல்ல வேண்டும்.
- கோயிலுக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் ஆலய காரியாலத்தை தொடர்புகொள்ளவும்.
- விளக்கு பூஜை, நூல் கட்டுதல் மற்றும் விசேட தினங்களுக்கான பூஜைகளுக்குரிய பணத்தினை ஆலய காரியாலத்தில் செலுத்தி பற்றுசீட்டினை பெற்றுக்கொள்ளவும்.
- நேர்த்திகடங்களான மொட்டை அடித்தல், காதுகுத்தல், அங்க பிரதட்சணம் செய்பவர்கள், விளக்கு எடுப்பவர்கள் ஆலய காரியாலத்தில் முன்கூட்டியே அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- நேர்த்திகடங்களுக்கான உருவ வகையறா, கண்மலர், உருவபொம்மை போன்றவற்றை ஆலய காரியாலத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- ஆலய குருமார்களின் விடுதி, சமையலறை, ஆலய காரியாலயம் அலுவலகங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் போன்ற அங்கீகரிக்கப்படாத பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைய வேண்டாம்.
- தகவல் மற்றும் உதவிக்கு ஆலய காரியாலயத்தை அணுகவும்.
கோயிலில் செய்யத் தகாதவை
- ஆலயத்தின் துப்பரவிற்கு இடையூறாக நடந்து கொள்ளல்.
- விரித்த கூந்தலுடன் ஆலய தரிசனம் செய்தல்.
- விக்கிரகங்களை தொட்டு வணங்குதல்.
- ஆலய அமைதிக்கு இடையூறு விளைவித்தல் .
- அம்பிகையின் பெரும்புகழ் அன்றி பிற வார்த்தைகள் பேசுதல்.
- மூலமூர்த்திக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
- கோயில் பிரசாதங்களை நிலத்தில் சிந்தி மிதித்தல்